க.அலம்பளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
கள்ளக்குறிச்சி: க.அலம்பளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த க.அலம்பளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழின் வினாடி வினா போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நடத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், 16 பேர் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரித்து 3 சுற்றுகளாக போட்டி நடந்தது. போட்டிக்கு, தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை சாந்தி முன்னிலை வகித்தார். பள்ளி பட்டம் இதழ் பொறுப்பாசிரியர் கலைவாணி வரவேற்றார்.
போட்டியில் 9ம் வகுப்பு மாணவர்கள் அபிஷேக், விஷ்ணு ஆகியோர் முதலிடமும், 8ம் வகுப்பு மாணவிகள் கிருஷண்யா, கிஷோரியா இரண்டாமிடமும் பிடித்தனர். இவர்கள் புதுச்சேரியில் நடக்கும் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு கள்ளக்குறிச்சி தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் (ஓய்வு) வெங்கடசுப்பன், சிவசக்தி காஸ் சர்வீஸ் உரிமையாளர் அரவிந்தன் ஆகியோர் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.
மேலும்
-
கல்வித்தகுதி குறித்து சர்ச்சை; இந்தோனேசியா துணை அதிபர் பதவி ராஜினாமா
-
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்க தயார்; அமைச்சர் செங்கோட்டையன்
-
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு; 3வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி