1.42 லட்சம் குட்டீஸூக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 1.42 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு, இம்மாதம் 31ம் தேதி வரை ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்நல மையங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக். 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை, ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்க பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கண் பார்வையைப் பாதுகாக்கவும் வைட்டமின் ‘ஏ’ அவசியம் என்பதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் இத்திரவத்தை வழங்கிக்கொள்ள வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது.
பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் வாயிலாக ஐந்து நாட்களில், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 925 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 1.42 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 98 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு இம்மாதம் 31ம் தேதி வரை ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்நல மையங்களில் வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
வீட்டு உபயோக பொருட்களுக்கு ‘டார்லிங்’கில் சலுகைகள் அறிவிப்பு
-
சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி
-
15 கூட்டுறவு அங்காடிகளில் ரூ.100க்கு 10 வகை காய்கறி
-
இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க ஆலோசனை தீவிரம்
-
துரைமுருகனை விமர்சித்த வீரமணியை கண்டிக்கணும் ஸ்டாலினுக்கு பா.ஜ., வலியுறுத்தல்
-
ஜி.பி.எஸ்., கருவியுடன் வந்த உடுப்பி நபரின் விமான பயணம் ரத்து