துரைமுருகனை விமர்சித்த வீரமணியை கண்டிக்கணும் ஸ்டாலினுக்கு பா.ஜ., வலியுறுத்தல்
சென்னை:
‘வேத மந்திரங்கள் முழங்க, துரைமுருகன் இல்ல திருமண விழா நடந்ததை விமர்சித்த தி.க., தலைவர் வீரமணியை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்’ என, பா.ஜ., மூத்த தலைவர் வானதி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் இல்ல திருமண விழா, வேத மந்திரங்கள் முழங்க நடந்தது, மகிழ்ச்சி தருகிறது. ஆனால், இதை, தி.க., தலைவர் வீரமணி விமர்சித்துள்ளார். வேதனையும், வெட்கமும் அடைவதாக கூறி, ஹிந்து மத வெறுப்பை கக்கியுள்ளார்.
தி.மு.க.,வில் உள்ள, மாற்று மதத்தினர், அவரவர் மத சடங்குகளின்படி, மத போதகர்களை வைத்து, திருமணங்களை நடத்தும்போது மட்டும், வீரமணி வாய்மூடி மவுனம் காக்கிறார். ஆனால், ஹிந்து மத முறைப்படி நடந்தால், கேலியும், கிண்டலும் செய்கிறார்.
துரைமுருகன் இல்ல திருமணத்தை கேலி, கிண்டல் செய்த வீரமணியின் அறிக்கை குறித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் விளக்கம் தர வேண்டும். வீரமணியின் அறிக்கை சரிதான், தி.மு.க., ஹிந்து விரோத கட்சிதான் என, ஸ்டாலின் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையெனில், வீரமணியை கண்டிக்க வேண்டும்.
பிற மதங்களை விமர்சிக்காமல், ஹிந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் தி.க., நாத்திக இயக்கம் அல்ல; ஹிந்து விரோத இயக்கம் மட்டுமே. இதை தமிழர்கள் புரிந்து கொண்டு விட்டது, கடந்த சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின் ஸ்டாலினுக்கு 90 சதவீதம் புரிந்திருக்கும். இனியும் ஹிந்து மதத்தை கேலி செய்தால், அவமதித்தால், தி.மு.க., என்ற கட்சியே இருக்காது.
இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
@block_B@
யாருக்கும் உரிமையில்லை
தி.மு.க.,வில் முக்கிய பொறுப்புகளில் உள்ள கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், தங்கள் மத வழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர். அதில் யாரும், எந்த கேள்வியும் கேட்பதில்லை. ஆனால், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் குடும்ப விழாவில் புத்தி சொல்வது ஒருபுறம், இதை காரணம் காட்டி அரசியலுக்கு அப்பாற்பட்டு, அவரது சமூக இணக்கத்தை சிலர் அவமானப்படுத்துவதை காண முடிகிறது.
எனவே, சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் ஹிந்து சடங்குகளை கேவலப்படுத்துவதை ஹிந்து முன்னணி பொறுத்து கொள்ளாது. இவ்வாறு வன்மத்தை துாண்டுவோர், மத நம்பிக்கைகளை கேவலப்படுத்துவோர் மீது, தமிழக அரசும், போலீசாரும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– காடேஸ்வரா சுப்ரமணியம்
தலைவர், ஹிந்து முன்னணிblock_B
மேலும்
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
கலெக்டருக்கு டார்ச்சர்; கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்