சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி
மறைமலைநகர்: மறைமலைநகர் அடுத்த கோவிந்தாபுரத்தில் ஸ்கூட்டர் மீது சரக்கு வாகனம் மோதியதில், பாஸ்கரன், 56 என்ற நபர் உயிரிழந்தார்.
சிங்கபெருமாள் கோவில் அடுத்த சின்ன செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்; கூலி தொழிலாளி. இவர் நேற்று (நவ.,3) மாலை, மெல்ரோசாபுரத்தில் இருந்து கருநிலம் நோக்கி தன் நண்பர் சுந்தர், 50, என்பவருடன் டி.வி.எஸ்., பைக்கில் சென்றார்.
கோவிந்தபுரம் அருகே சென்ற போது மெல்ரோசாரம் நோக்கி வந்த மகேந்திரா மேக்ஸ் ‘பிக்கப்’ வாகனம் பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் சுந்தருக்கு சுந்தருக்கு செ ங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரான தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ், 30 என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.