பூங்காவில் உழவர் உற்பத்தி விற்பனை நிலையம் திறப்பு
ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உழவர் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.
நீலகிரியில், 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யப்படும் கைவினை பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் அரசு சார்பில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா வளாகத்தில் தோடர் பழங்குடியின மக்கள் தயாரிப்புகள் விற்பனை செய்வதற்காக அங்காடி கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணியர் இந்த அங்காடியில் இருந்து பல்வேறு பொருட்களையும் வாங்கி செல்கின்றனர். தற்போது ஆதிமலை பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கப்படும் பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்வதற்காக அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் லட்சுமி பவ்யா பங்கேற்று அங்காடியை திறந்து வைத்தார். அங்காடி விற்பனை செய்யப்படும் பொருட்களையும் பார்வையிட்டார்.
மேலும்
-
வீட்டு உபயோக பொருட்களுக்கு ‘டார்லிங்’கில் சலுகைகள் அறிவிப்பு
-
சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி
-
15 கூட்டுறவு அங்காடிகளில் ரூ.100க்கு 10 வகை காய்கறி
-
இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க ஆலோசனை தீவிரம்
-
துரைமுருகனை விமர்சித்த வீரமணியை கண்டிக்கணும் ஸ்டாலினுக்கு பா.ஜ., வலியுறுத்தல்
-
ஜி.பி.எஸ்., கருவியுடன் வந்த உடுப்பி நபரின் விமான பயணம் ரத்து