பாதுகாப்பான தீபாவளி தீயணைப்பு துறை அறிவுரை
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் மக்கள் அனைவரும் தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாட தீயணைப்பு துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, சந்தோசமாக கொண்டாககூடிய பண்டிகை தீபாவளி. இந்நாளில் அசம்பாவிதங்களை தவிர்த்து பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க, கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினர் சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு அறிவிப்பில், பட்டாசுகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும். பஸ் ஸ்டாண்ட், காஸ் குடோன், பெட்ரோல் பங்க் அருகாமையில் பட்டாசு வெடிக்க கூடாது.
ராக்கெட், புஸ்வானம் போன்ற பட்டாசுகளை திறந்தவெளியில் வெடிக்க வேண்டும். மேலும், சிறியவர்கள் பட்டாசு வெடிக்கும் போது, அருகாமையில் பெரியவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். இத்துடன் பக்கத்தில் தண்ணீர், மணல் வைத்திருக்க வேண்டும்.
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரை ஊற்றிய பின், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
வீட்டு உபயோக பொருட்களுக்கு ‘டார்லிங்’கில் சலுகைகள் அறிவிப்பு
-
சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி
-
15 கூட்டுறவு அங்காடிகளில் ரூ.100க்கு 10 வகை காய்கறி
-
இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க ஆலோசனை தீவிரம்
-
துரைமுருகனை விமர்சித்த வீரமணியை கண்டிக்கணும் ஸ்டாலினுக்கு பா.ஜ., வலியுறுத்தல்
-
ஜி.பி.எஸ்., கருவியுடன் வந்த உடுப்பி நபரின் விமான பயணம் ரத்து