மேட்டுப்பாளையம் ஊட்டி சேவை மேலும் மூன்று நாட்களுக்கு ரத்து
குன்னுார்: குன்னுார் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண்சரிவு மற்றும் பாறைகள் அகற்றும் பணி நடந்து வருவதால் மேலும் மூன்று நாட்களுக்கு மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த, 23ல் இரவு பெய்த கனமழையால், மலை ரயில் பாதையில், 56 இடங்களில் பாறைகள் உருண்டத்துடன் மண் சரிவும் ஏற்பட்டது. இதனால், 24ல் இருந்து மேட்டுப்பாளையம்– ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.
ரயில்வே ஊழியர்கள் தண்டவாளங்களில் இருந்த ராட்சத பாறைகள், மண் சரிவுகள் மற்றும் மரங்கள் அகற்றி சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேதத்தின் தீவிரம் அதிகமாக இருப்பதால் சீரமைப்பு பணிகள் முழுமை பெறவில்லை.
சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில்,‘மேட்டுப்பாளையம் ஊட்டி ரயில் மற்றும் சிறப்பு ரயில் மட்டும், 7ம் தேதி வரை, மேலும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது,’ என்றனர். ஊட்டி –குன்னுார் இடையே மலை ரயில் பாதிப்பின்றி இயக்கப்பட்டு வருகிறது.
மேலும்
-
வீட்டு உபயோக பொருட்களுக்கு ‘டார்லிங்’கில் சலுகைகள் அறிவிப்பு
-
சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி
-
15 கூட்டுறவு அங்காடிகளில் ரூ.100க்கு 10 வகை காய்கறி
-
இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க ஆலோசனை தீவிரம்
-
துரைமுருகனை விமர்சித்த வீரமணியை கண்டிக்கணும் ஸ்டாலினுக்கு பா.ஜ., வலியுறுத்தல்
-
ஜி.பி.எஸ்., கருவியுடன் வந்த உடுப்பி நபரின் விமான பயணம் ரத்து