திருநீர்மலை ஏரியில் மண் சரிவை தடுக்க தடுப்பு அமைக்கும் பணி தொடக்கம்
திருநீர்மலை: திருநீர்மலை ஏரியில் மண் அரிப்பை தடுக்க, கரையோரம் தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
குரோம்பேட்டை அடுத்த திருநீர்மலை பெரிய ஏரி, நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 194 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஏரி, ஆக்கிரமிப்பால் 147 ஏக்கராக குறைந்துள்ளது.
தாம்பரம், சானடோரியம் மெப்ஸ் வளாகம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பல ஆண்டுகளாக ஏரியில் கலந்து மாசடைந்தது. மேலும், கரையில் கருவேல மரங்கள் வளர்ந்து, நிலத்தடி நீரை பாதித்தது. குப்பை, கழிவுகள் கொட்டும் இடமாகவும் மாறியது.
ஏரி நாசமடைவதை தடுத்து நிறுத்தி, துார்வாரி ஆழப்படுத்த வேண்டும் என, ஏரி பாதுகாப்பு குழுவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, 5.15 கோடி ரூபாய் செலவில் ஏரி சீரமைக்கும் பணி, கடந்த ஆட்சியில் தொடங்கியது.
கழிவுநீரை வெளியேற்றி, ஏரியை துார்வாரி ஆழப்படுத்துவது, கருவேல மரங்களை அகற்றுவது, பறவைகள் அமர வசதியாக இரு இடங்களில் மண் திட்டு அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கரையில் மண் சரிவை தடுக்கும் வகையில், கரையோரம் தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மேலும்
-
வீட்டு உபயோக பொருட்களுக்கு ‘டார்லிங்’கில் சலுகைகள் அறிவிப்பு
-
சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி
-
15 கூட்டுறவு அங்காடிகளில் ரூ.100க்கு 10 வகை காய்கறி
-
இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க ஆலோசனை தீவிரம்
-
துரைமுருகனை விமர்சித்த வீரமணியை கண்டிக்கணும் ஸ்டாலினுக்கு பா.ஜ., வலியுறுத்தல்
-
ஜி.பி.எஸ்., கருவியுடன் வந்த உடுப்பி நபரின் விமான பயணம் ரத்து