குதிரை பேரத்தில் திமுக, அதிமுக: அமைச்சர் விஸ்வநாதன் குற்றச்சாட்டு

1

மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் கூறியதாவது: தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துவிட்டது என இபிஎஸ் கூறுகிறார். விலைவாசி உயர்வு குறித்து தமிழக முதல்வர் விஜய் தீவிரமாக கவனித்து வருகிறார். அதிமுக ஆட்சியின்போது இபிஎஸ் விலைவாசியை சீர்குலைத்து வைத்திருந்தார். அதனால் விலைவாசி உயர்வு குறித்து அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. முதல்வர் விஜய் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவர்தான்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார். அவர்களது கட்சித் தலைவர்களின் பெயரிலேயே பல திட்டங்களை அறிவித்தார். அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக அத்திட்டங்கள் பலவற்றை முழுவதுமாக நிறுத்தியது. மாற்றி அமைத்தது. இது இயல்பானதுதான். அதுபோல இன்றைய ஆட்சியில் எங்கள் அரசின் பெயரை வைத்துள்ளோம்.

தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக திமுக, அதிமுகவினர் குதிரைபேரம் நடத்துவதாக தவெக, எம்எல்ஏ முஸ்தபா கூறியிருக்கிறார் என்றால், நாங்கள் ஏற்கனவே சொன்னது போல தினமும் திமுகவினர் இந்த திட்டத்தில் செயல்படுகின்றனர். இந்தக் குதிரை பேரம் தொடர்ந்து நடக்கிறது. ஆனால் எங்கள் பக்கம் ஒருவரும் இதில் ஈடுபடவில்லை.

அதிமுகவில் இருந்து 5 பேர் தவெகவுக்கு வந்தனர் என்றால் அவர்கள் விரும்பியே வந்தனர். அவர்களின் தலைமை மீதான நம்பிக்கையின்மையால் நல்ல தலைவர், மக்கள் விரும்பும் தலைவர் இருக்கிறார் எனக்கருதினர். அதனால் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்தனர். எனவே தமிழகத்தில் மக்கள் விரும்பும் ஒரே தலைவர் விஜய்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement