இரட்டை புயல்களால் ஏற்பட்ட சேதத்துக்கு ரூ.4,500 கோடி நிவாரணம்; மத்திய அரசிடம் கேட்கிறது ஆந்திரா

1

-நமது நிருபர்-

ஆந்திராவில் கடந்த அக்டோபர் இறுதியில் அர்னாப் புயலும், இந்த மாத துவக்கத்தில் முரசு புயலும் அடுத்தடுத்து தாக்கியது. ஒரு வார இடைவெளியில் தாக்கிய இந்த இரண்டு புயல்களால் மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

அர்னாப் புயல் தாக்கியதில் 16 மாவட்டங்களை சேர்ந்த 781 கிராமங்கள் பாதிக்கப்பட்டன; 7 லட்சத்து 41 ஆயிரத்து 315 ஏக்கர் பயிர்களும், 33 ஆயிரத்து 606 ஏக்கர் தோட்டக்கலைப் பயிர்களும் சேதமடைந்தன; 29 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன.

புயலால் 4 ஆயிரத்து 563 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. முரசு புயலால் ஆந்திராவில் ஏழு மாவட்டங்களை சேர்ந்த 465 கிராமங்கள் பாதித்தன; ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 730 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்தன. இதன் மூலம் 343 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டது.

சேத விபரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதல்வர் சந்திரபாபுநாடு பலமுறை தொலைபேசியில் விளக்கியுள்ளார்

மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எழுதியுள்ள கடிதத்தில், இரட்டை புயல்களால் ஏற்பட்டுள்ள சேதத்திற்கான நிவாரண தொகையாக உடனடியாக 4 ஆயிரத்து 563 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபுவை, பிதரமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

Advertisement