முதல்வர் வீடு அருகே பெண் குழந்தை மீட்பு
நீலாங்கரை: முதல்வர் விஜய் வீட்டின் அருகே தொப்புள் கொடியுடன் கிடந்த பெண் குழந்தையை, போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகரில் முதல்வர் விஜய் வீடு உள்ளது. அங்கிருந்து 400 மீ., துாரத்தில், கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4வது பிரதான சாலையில், இன்று (நவ.,4) காலை பகுதிமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, சாலையோரம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அருகில் சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமான தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை கிடந்தது.
குழந்தையை மீட்டு, நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் குழந்தையை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சை அளித்து, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர்; குழந்தை நலமாக உள்ளது.
குழந்தைகள் நலக்குழுமத்திற்கு தகவல் தெரிவித்து, அவர்கள் பொறுப்பில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. நீலாங்கரை போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, குழந்தையின் தாய் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
பூட்டிய வீடுகளில் புகுந்து முகமூடி நபர்கள் கைவரிசை
-
விளம்பர பேனர்களால் விபாபாரம் பாதிப்பு: மீஞ்சூர் வியாபாரிகள் புகார்
-
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
-
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலிக்க தனி அலுவலகம் நடத்தியது அம்பலம்!
-
தம்பதியை தாக்கி செயின் பறிப்பு விவசாயி கைது; 2 பேருக்கு வலை
-
போலி ஆவணம் தயாரித்து ரூ.1.36 கோடி மோசடி: தனியார் கம்பெனி சீனியர் மேலாளர் மீது வழக்கு