பூட்டிய வீடுகளில் புகுந்து முகமூடி நபர்கள் கைவரிசை
மப்பேடு: கொருக்கம்பேடு பகுதியில், முகமூடி அணிந்த நபர்கள், பூட்டிய வீடுகளில் புகுந்து, வெள்ளி விளக்குகளை திருடி சென்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம், கூவம் ஊராட்சிக்குட்பட்ட கொருக்கம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம், 75. உடற்கல்வி ஆசிரியர்.
இவர், தன் மனைவி கன்னியம்மாள், 70, உடன், சென்னையில் உள்ள மகள் வீட்டில் வசித்து வருகிறார். கோவில் திருவிழா மற்றும் கிராம பகுதிகளில் நடைபெறும் விழாவிற்கு மட்டும், கொருக்கம்பேடு வந்து செல்வார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை இவரது கொருக்கம்பேடு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி அணிந்த நபர்கள், இரு வெண்கல விளக்கு, வெள்ளி விளக்கு ஆகியவற்றை திருடி சென்றனர்.
இதுகுறித்து கன்னியம்மாள் கொடுத்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்
-
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்க பாஜ வலியுறுத்தல்
-
ஹிமாசல்லில் பாரா கிளைடிங் விபத்தில் சுற்றுலாப் பயணி பலி
Advertisement
Advertisement