தம்பதியை தாக்கி செயின் பறிப்பு விவசாயி கைது; 2 பேருக்கு வலை
வடலூர்: முன்விரோதத்தில் தம்பதியை வழிமறித்து தாக்கிய, செயினை பறித்த விவசாயியை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடிவருகின்றனர்.
வடலூர் அடுத்த சேராக்குப்பத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன்,61; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கஜேந்திரன்,49; என்பவருக்கும் நிலப் பிரச்னையில் முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், நேற்று (நவ.,3) சவுந்தர்ராஜன், தனது மனைவியுடன் பைக்கில் வடலூர் சென்றார். அப்போது, சேராக்குப்பம் ரேஷன் கடை அருகே கஜேந்திரன் மற்றும், அவரது மகன்கள் தம்பதியை வழிமறித்து, இரும்பு பைப்பால் தாக்கி, 2 சவரன் செயினை பறித்து, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயமடைந்த சவுந்தர்ராஜன் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்கு பதிந்து, கஜேந்திரனை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது மகன்கள் அருண், ஆகாஷ் ஆகியோரை தேடிவருகின்றனர்.
மேலும்
-
ஆந்திராவிலிருந்து 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது
-
வீட்டு தாழ்ப்பாளை உடைத்து ரூ.ஒரு லட்சம் திருடியவர் கைது
-
ஆசிரியை படத்தை ஆபாசமாக சித்தரித்த ஆசிரியர்கள் மீது வழக்கு
-
நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பெருமாள் கோவில் நிலத்தை மீட்க குழு அமைப்பு
-
கோவை தி.மு.க., அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்
-
லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி; நண்பர் ‘சீரியஸ்’ விபத்திற்கு காரணமான இரு மாடுகளும் உயிரிழப்பு