போலி ஆவணம் தயாரித்து ரூ.1.36 கோடி மோசடி: தனியார் கம்பெனி சீனியர் மேலாளர் மீது வழக்கு
புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் கம்பெனியில் இருந்து பொருட்களை வட மாநிலங்களுக்கு அனுப்பியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1.36 கோடி மோசடி செய்த சீனியர் மேலாளர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிரான்ஸின் லாஜிஸ்டிக்ஸ் தனியார் நிறுவனத்தின் புதுச்சேரிக்கான சீனியர் மேலாளராக சண்முகபுரத்தை சேர்ந்த கலைச்செல்வன், 32; என்பவர் கடந்த 2024ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் நிறுவனத்தின் நிதி கணக்குகளை தணிக்கை செய்தபோது, கடந்த 2025ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி முதல் 2026 செப்டம்பர் 1ம் தேதி வரையில் புதுச்சேரிக்கான கணக்குகளில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, புதுச்சேரியில் இருந்து கலைச்செல்வன் அனுப்பிய ஆவணங்களை சரிபார்த்தபோது, புதுச்சேரி, வடமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உற்பத்தியான பொருட்களை வட மாநிலங்களுக்கு கொண்டு செல்ல லாரிகள் பயன்படுத்தப் பட்டதாகவும், அதற்காக பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டதாகவும் போலியான மற்றும் திருத்தப்பட்ட ஆவணங்களை உருவாக்கி, நிறுவனத்தின் பணத்தை ரூ.1 கோடியே 36 லட்சம் மோசடி செய்து எடுத்திருப்பது தெரிந்தது.
இதுகுறித்து அந்த தனியார் நிறுவனத்தின் பொறுப்பு அதிகாரி பிரதீஷ், நேற்று முன்தினம் புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் கலைச்செல்வன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
கலெக்டருக்கு டார்ச்சர்; கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்