மகாதேவ் சூதாட்ட செயலி; மற்றொரு முக்கிய குற்றவாளி ரவி உப்பால் துபாயில் கைது
-நமது நிருபர்-
சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகர், ரவி உப்பால் ஆகிய இருவரும் இணைந்து, எமிரேட்சை தலைமையிடமாக கொண்டு மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலியை நடத்தினர்.
இந்த செயலியின் மூலம் சுமார் ரூ.6,000 கோடிக்கும் அதிகமாக பணமோசடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பல பாலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதிகளும் இந்த வழக்கின் விசாரணை வளையத்தில் உள்ளனர்.
குற்றவாளியான சவுரப் சந்திரசேகருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது. ஓமனில் இருந்து அவரை கைது செய்து சிபிஐ அதிகாரிகள் நாடு கடத்தி வந்தனர். தற்போது இந்த செயலியின் இணை நிறுவனருமான ரவி உப்பால் துபாயில் கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறை விடுத்த 'ரெட் கார்னர்' நோட்டீஸின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்காக துபாய் அதிகாரிகளுடன் மத்திய அரசு தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
மேலும்
-
பூட்டிய வீடுகளில் புகுந்து முகமூடி நபர்கள் கைவரிசை
-
விளம்பர பேனர்களால் விபாபாரம் பாதிப்பு: மீஞ்சூர் வியாபாரிகள் புகார்
-
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
-
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலிக்க தனி அலுவலகம் நடத்தியது அம்பலம்!
-
தம்பதியை தாக்கி செயின் பறிப்பு விவசாயி கைது; 2 பேருக்கு வலை
-
போலி ஆவணம் தயாரித்து ரூ.1.36 கோடி மோசடி: தனியார் கம்பெனி சீனியர் மேலாளர் மீது வழக்கு