தேனியில் குவியும் பொதுமக்கள் களைகட்டிய தீபாவளி விற்பனை
தேனி: தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க தேனியில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நவ.,8 ல் கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்காக புத்தாடைகள், இனிப்பு, கார வகைகள் தயாரிக்க பொருட்கள் வாங்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தேனிக்கு வருகின்றனர். இதனால் பழைய பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு, பெரியகுளம் ரோட்டில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக மாலையில் அதிக அளவிலான பொதுமக்கள் கடைவீதியில் குவிந்து வருவதால் கடைவீதிகளில் வியாபாரம் களைகட்டி உள்ளது. வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி செல்வதால் நகர்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் தொடர்கிறது. கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ளனர். ரோட்டோர கடைகளும் அதிகரித்துள்ளன. நகர்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கவும், மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் வரும் நாட்களில் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்.
மேலும்
-
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
-
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலிக்க தனி அலுவலகம் நடத்தியது அம்பலம்!
-
தம்பதியை தாக்கி செயின் பறிப்பு விவசாயி கைது; 2 பேருக்கு வலை
-
போலி ஆவணம் தயாரித்து ரூ.1.36 கோடி மோசடி: தனியார் கம்பெனி சீனியர் மேலாளர் மீது வழக்கு
-
பட்டாசுகள் வெடிக்க நேர கட்டுபாடு
-
சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி பலி