பட்டாசுகள் வெடிக்க நேர கட்டுபாடு

புதுச்சேரி: பட்டாசுகள் வெடிக்க நேர கட்டுபாடுகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கலெக்டர் குலோத்துங்கன் செய்திக்குறிப்பு;

உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி, வெடிபொருட்களின் உற்பத்தி, விற்பனை கொள்முதல் மற்றும் பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளது.

அதன்படி, தீபாவளி பண்டிகையில், பொதுமக்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசு வியாபாரிகள், குறைந்த உமிழ்வு கொண்ட பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும். பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்கவும், விற்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற பட்டாசுகள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது.

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற வணிகர்கள் பட்டாசு விற்பனை செய்ய வேண்டும். ஆன்லைன் பட்டாசு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பட்டாசுகளை உற்பத்தி மற்றும் விற்பவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

தீபாவளி அன்று காலை 7:00 முதல் 8:00 மணி வரையும், இரவு 7:00 முதல் 8:00 மணி வரை மட்டும் மக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement