சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி பலி

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி இறந்தார்.

சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி, 65: இவர் இன்று (நவ.,4) காலை 9: 00 மணிக்கு வானமாதேவி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடந்தபோது, கும்பகோணத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதியது.

அதில் தலையில் அடிபட்டு உயிருக்கு போராடிய பொன்னுசாமியை, அங்கிருந்தவர்கள் மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.

சோழத்தரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement