முற்றுகைப் போராட்டம்

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நுகர்பொருள் வாணிப கழக வளாகத்தின் முன் சுமை துாக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவர் அன்னக்கொடி தலைமை வகித்தார். சுமை தூக்குவோர் சங்கத்திற்கான அங்கீகாரத் தேர்தலை உடனடியாக நடத்துவது, நிலுவையில் உள்ள 60 சதவீத கூலி உயர்வை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement