அருணாசலேஸ்வரர் கோவிலில் நெய்குட காணிக்கை செலுத்தும் மையம் திறப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா, வரும், 15ல், கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10ம் நாள் விழாவில், 24ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்படும்.
மஹா தீபம் ஏற்ற நெய்யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தவர், நெய்யாக செலுத்த முடியாத பக்தர்கள், அதற்குண்டான தொகையை கோவிலில் செலுத்துவதற்கு வசதியாக நேற்று நெய்குட காணிக்கை கவுன்டர் திறக்கப்பட்டது. இதில், ஒரு கிலோ நெய் காணிக்கையாக, 600 ரூபாய், அரை கிலோ நெய், 300 ரூபாய், கால் கிலோ, 150 ரூபாய் என செலுத்தலாம்.
இவற்றை கோவில் இணை ஆணையர் பரணிதரன் தொடக்கி வைத்தார். நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு அதற்கான ரசீது வழங்கப்படும். தீப திருவிழா முடிந்த பின்னர், ஆருத்ரா தரிசனத்தன்று, நடராஜருக்கு முதலில் மஹா தீப மை சாத்தப்பட்டு பின்பு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு, மஹா தீப மை பிரசாதம் இலவசமாக வழங்கப்படும்.
நேரடியாக சென்று நெய் காணிக்கை செலுத்த முடியாத பக்தர்களின் http://annamalaiyar.hrce.tn.gov.in என்ற அருணாசலேஸ்ரவர், கோவில் இணையதளம் மூலமாக செலுத்தலாம்.
மேலும்
-
கோபுரத்தை சுத்தம் செய்யும் பணிக்கு நந்தி வாகனத்தை பயன்படுத்தியதால் சர்ச்சை
-
மின் சேமிப்பு திறன் மேம்பாட்டுக்காக ரூ.14,500 கோடி நிதி ஒதுக்கீடு: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
-
புழுதியூரில் ரூ.2.70 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
-
விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்
-
238 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
-
புதிய பட்டுக்கூடு அங்காடி காணொலி மூலம் திறப்பு