‘தினமலர் - பட்டம்’ இதழ் வினாடி-வினா போட்டி

விழுப்புரம்: ‘தினமலர் - பட்டம்’ இதழ், நடத்தும் ‘பதில் சொல்; பரிசு வெல்’ வினாடி வினா போட்டி, விழுப்புரம் டி.இ.எல்.சி., நடுநிலைப் பள்ளியில் நடந்தது.

விழுப்புரம் ராயல்ஸ் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், 16 பேர் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரித்து 3 சுற்றுகளாக போட்டி நடந்தது. போட்டிக்கு, பள்ளி தாளாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அருள் ஜான்சன் முன்னிலை வகித்தார்.

போட்டியில் 8ம் வகுப்பு மாணவிகள் மைஜரா, மவுனிகா ஆகியோர் முதலிடமும், மாணவிகள் மணிமேகலை, ஹஸ்மத்பேகம் இரண்டாமிடமும் பிடித்தனர். இவர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு, விழுப்புரம் ராயல் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர். பள்ளி ஆசிரியர்கள் எலியாஸ், டைட்டஸ் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement