ஊழல் வழக்கில் கைதான மாஜி அமைச்சர் மகேஷூக்கு ஜாமின் இல்லை; வழக்கு ஒத்திவைப்பு

2

-நமது நிருபர்-

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகியுள்ள திமுக முன்னாள் அமைச்சர் மகேஷின் ஜாமின் மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் போலீசார் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்த இருக்கிறோம்; பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனு மீதான விசாரணையை நவம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இன்றும் மகேஷூக்கு ஜாமின் கிடைக்கவில்லை. லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்தில் கைதாகியுள்ள, தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ், சிறையில் இருந்து வெளியே வர தற்போது வாய்ப்பு இல்லை. விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமின் வழங்க, போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

Advertisement