ஆசிரியை படத்தை ஆபாசமாக சித்தரித்த ஆசிரியர்கள் மீது வழக்கு
செங்கல்பட்டு: தன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்ததாக, தனியார் பள்ளி ஆசிரியை கொடுத்த புகாரின் படி, இரண்டு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில், 33 வயதுடைய திருமணமான பெண் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஹென்றி ஜார்ஜ், மற்றொரு ஆங்கில ஆசிரியரான பிரேடி ஆகிய இருவரும், இரண்டு மாதங்களாக பெண் ஆசிரியரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சக ஆசிரியர்களுக்கு மொபைல் போனில், அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதை தட்டி கேட்ட பெண் ஆசிரியை யிடம், இருவரும் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பெண் ஆசிரியர் அளித்த புகாரின் படி, செங்கல்பட்டு மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, ஹென்றி ஜார்ஜ், பிரேடி ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
ஆந்திராவிலிருந்து 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது
-
வீட்டு தாழ்ப்பாளை உடைத்து ரூ.ஒரு லட்சம் திருடியவர் கைது
-
உலக செய்திகள் சில வரிகளில்
-
நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பெருமாள் கோவில் நிலத்தை மீட்க குழு அமைப்பு
-
கோவை தி.மு.க., அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்
-
லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி; நண்பர் ‘சீரியஸ்’ விபத்திற்கு காரணமான இரு மாடுகளும் உயிரிழப்பு