ஆந்திராவிலிருந்து 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது

மீஞ்சூர்: ஆந்திர மாநிலத்தில் இருந்து, 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவரை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், இன்று (நவ.,4) கைது செய்தனர்.

ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்திவரப்படுவதை தடுக்கும் வகையில், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

நேற்று, சோழவரம் டோல்கேட் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் கடலுார் மாவட்டம், சடப்பாளையம் பகுதியை சேர்ந்த இந்திரஜித், 21, வான்னியபுரம் பகுதியை சேர்ந்த விஷ்வா, 19, என்பது தெரிந்தது.

அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, அவற்றில், 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

கடலுார் மாவட்டத்தில் விற்பனை செய்வதற்காக, ஆந்திர மாநிலம், ராயவாடா பகுதியில் இருந்து கடத்தி வந்ததும் விசாரணையில் தெரிந்தது.

அதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement