உலக செய்திகள் சில வரிகளில்
@block_B@
தொழிலாளர்களுக்கு எதிராக
ஆளுங்கட்சியும் போராட்டம்
டாக்கா : நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ஆடை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதற்கு எதிராக ஆளுங்கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஆடை உற்பத்தியை பிரதான தொழிலாகக் கொண்டது வங்கதேசம். அங்கு பல ஆண்டுகளாக ஊதியம் உயர்த்தப்படவில்லை என்று கூறி, 50க்கும் மேற்பட்ட ஆடை தொழிற்சாலைகளை மூடி தொழிலாளர்கள் 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியதால், துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் போராட்டத்திற்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சி தான் காரணம் என்று கூறி ஆளும் வங்கதேச தேசியவாத கட்சியினர் எதிர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
போராட்டக்காரர்களுடன், அவாமி லீக் கட்சியினர் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.block_B