விண்வெளிக்கு கார் பானட்டை கொண்டு சென்று சோதித்த சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனம்
சென்னையை சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனம் ஏரோ லான்ச் , நவம்பர் 1ல் பெயின்ட் பாதுகாப்பு படலம் பூசப்பட்ட ஒரு சிறிய கார் பானட்டை விண்வெளிக்கு அனுப்பியது.
விண்வெளியில் நிலவக்கூடிய அதிக குளிர், புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தை ஆய்வு செய்வதற்காக இந்த பானட் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தியா எச்ஏபி0226 திட்டத்தின்படி,
கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து ஏவப்பட்டது.
பலூன் உதவியுடன் விண்வெளியில் 21 கிலோ மீட்டர் உயரத்திற்கு இந்த கார் பானட் கொண்டு செல்லப்பட்டது.
இந்த பானட்டை வைப்பதற்கு என்றே, பிரத்யேகமாக இயந்திரத்தை ஏரோ லான்ச் நிபுணர்கள் வடிவமைத்து இருந்தனர்.
அதன் கட்டமைப்பில் எடை குறைந்த பாலிஸ்டிரீன், கார்பன் பைபர் குழாய்களும், குளிர் மற்றும் புற ஊதா கதிர்களின் தாக்கத்தை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பாகங்களும் பயன்படுத்தப்பட்டன.
வானம் மற்றும் மேகமூட்டங்களுக்கு இடையே, 5.7 கே ரெஸொல்யூசனின் படம் பிடிக்கும் வகையில் 360 கோணத்தில் சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
பல மணி நேர ஆய்வு முடிவில் மீண்டும் பத்திரமாக பூமியில் தரை இறக்கப்பட்டது.
ஏவுதளத்தில் இருந்து30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேல் காங்கேயன் குப்பம் பகுதியில் இது தரை இறங்கியது.
ஆய்வின் முடிவுகள் பரிசோதிக்கப்பட்டு வருவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மாஸ்க், தான் உருவாக்கிய காரை விண்வெளிக்கு அனுப்பி சோதனை நடத்தினார். அதே போன்று ஏரோலஞ்ச் நிறுவனத்தினரும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
கல்வித்தகுதி குறித்து சர்ச்சை; இந்தோனேசியா துணை அதிபர் பதவி ராஜினாமா
-
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்க தயார்; அமைச்சர் செங்கோட்டையன்
-
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு; 3வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி