பெண்ணிடம் 5 சவரன் நகை ‘அபேஸ்’ விருதையில் ஓடும் பஸ்சில் துணிகரம்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில், ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 சவரன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தை சேர்ந்தவர் குறளேந்தி மகள் சிந்து, 24. இவர் நேற்று தனது குடும்பத்தினருடன், விருத்தா சலம் கடை வீதியில் உள்ள நகைகடையில் 5 சவரன் நகை வாங்கியுள்ளார். நகையை தனது ேஹண்ட் பேக்கில் வைத்துக் கொண்டு, கடைவீதியில் இருந்து பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்சில் சென்றார்.

பஸ் நிலையம் வந்தபோது, ேஹண்ட் பேக்கின் ஜிப் திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, உள்ளே பார்த்தபோது, 5 சவரன் நகையை காணவில்லை. பஸ்சில், ஏறியபோது, மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement