மூவருக்கு குண்டாஸ் கலெக்டர் அதிரடி
கடலுார்: வழிப்பறி மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் ஈடுபட்ட 3பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
கடலுார் கம்மியம்பேட்டையை சேர்ந்தவர் ஜீவா (எ) ஜீவானந்தம், 26; சதீஷ் (எ) ஹரிதாஸ்,25; ரவுடிகளான இவர்கள், கடந்த 18 ம் தேதி வழப்பறி வழக்கில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டை சேர்ந்தவர் செவ்வேல் மகன் ஜீவா,19; இவர் முன்விரோதம் காரணமாக கடந்த 17 ம் தேதி அதே பகுதியை சேர்ந்த ரினோ ஸ்டீபன்ராஜ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் காடாம்புலியூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்களின் தொடர் குற்றச் செயலை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., பரிந்துரையை ஏற்று மூவரையம் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement