சூப்பர் மார்க்கெட்டில் திடீர் தீ

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் சூப்பர் மார்கெட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் மக்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது.

காட்டுமன்னார்கோவில் செட்டித் தெருவில் இயங்கி வரும் தனியார் சூப்பர் மார்க்கெட்டில், நேற்று இரவு 7:45 மணிக்கு மின் கசிவு காரணமாக கரும் புகை ஏற்பட்டு, கடை முழுவதும் பரவியது. மின்சாரம் தடை பட்டு இருளில் மூழ்கியது. பொருட்கள் வாங்கிக் கொண் டிருந்த பொதுமக்கள், கரும்புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு, அலறி அடித்துக் கொண்டு வெளியே ஒடினர்.

தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, ரசாயன பவுடரை பயன்படுத்தி, கரும்புகையை கட்டுப்படுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரியத்தினர், கடை மின் இணைப்புகளை பரிசோதித்து மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் ஜெனரேட்டர் மூலம் மின்இணைப்பு கொடுக்கப்பட்டு சரி செய்யப்பட்டன.

கரும்புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த கடை ஊழியர்கள் மூவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்து குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement