ஹோட்டலில் தகராறு : 7 பேர் கைது

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகர் சிவபுரி மெயின் ரோட்டை சேர்ந்தவர் மேற்கு வங்காளம் பிரம்மாகலிஷா பகுதியை சேர்ந்த ஹாஜி அக்பர் மகன் ஜஹாங்கீர், 32, அண்ணாமலை பல்கலைக்கழக தாமரை விடுதி அருகே ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று இவரது ஹோட்டலுக்கு வந்த அண்ணாமலைநகர் ஜம்புகுளம் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் தங்க கதிரவன், 32; உட்பட மூன்று பேர் மது போதையில் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

கடையில் இருந்த ஜஹாங்கீர் மற்றும் ஹபிபுல்லா அலிஸா, சபியுல்லா லிஷா, ஷேக் அத்தர் உள்ளிட்டோர் தங்க கதிரவனை தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து அண்ணாமலநகர் போலீசில் தங்க கதிரவன் மற்றும் ஜஹாங்கீர் ஆகியோர் தனித்தனியே புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிந்து ஜஹாங்கீர், 32; ஹபிபுல்லா அலிஷா, 22; சபியுல்லா அலிஷா, 29; ஷேக் அத்தர், 33, மற்றும் தங்க கதிரவன், 32 உள்ளிட்ட 3 பேர் மற்றும் அவருடன் வந்த இரு சிறுவர்களை கைது செய்தனர்.

Advertisement