பெண்களிடம் நகை பறித்த இருவர் கைது

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த வேங்கை கிராமத்தை சேர்ந்த சண்முகம் மனைவி கலையரசி, 38; மரக்காணம் சாலை, சுரேஷ் பாண்டியன் நகரில் வசிக்கிறார். இவர், கடந்த செப்., 27ம் தேதி அதிகாலை அருகில் இருக்கும் கடைக்கு சென்று திரும்பும் போது, பைக்கில் வந்த இருவர் அவரது கழுத்தில் இருந்த 2 சவரன் செயினை பறித்து சென்றனர்.

இதேபோல், கடந்த அக்., 25ம் தேதி காலை, திண்டிவனம் நகர பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி கஸ்துாரி, 60; திண்டிவனம் நத்தமேடு பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த இருவர் அவரது கழுத்திலிருந்த 5 சவரன் செயினை பறித்து சென்றனர்.

இந்த இரு பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது, சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் தாலுகா நாச்சிகாபுரம் பகுதியை சேர்ந்த பாண்டி மகன் சண்முகநாதன், 30; அதே பகுதியை சேர்ந்த குன்றக்குடி அடுத்த கொரட்டிகிராமத்தை சேர்ந்த நாச்சியப்பன் மகன் கலைதாஸ், 32; என தெரியவந்தது.

திண்டிவனம் போலீசார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பைக்கை பறிமுதல் செய்தனர்.

Advertisement