மேட்டூர் அணை நீர்வரத்து 4,993 கனஅடியாக உயர்வு

மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த செப்., 6ல் அணை நீர்மட்டம், 92.39 அடியாக இருந்தது. செப்., 1 முதல், டெல்டா பாசனத்துக்கு தொடர்ச்சியாக நீர் திறந்ததால் கடந்த மாதம், 24ல் அணை நீர்மட்டம், 54.56 அடியாக சரிந்தது.

பின் திறப்பை விட வரத்து அதிகரிப்பால், 25ல் நீர்மட்டம், 54.64 அடியாக அதிகரித்தது.நேற்று காலை வினாடிக்கு, 4,614 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, மாலை, 4,993 கனஅடியாக அதிகரித்தது. பாசனத்துக்கு வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் திறந்ததால், நேற்று மாலை அணை நீர்மட்டம், 56.54 அடி, நீர்இருப்பு, 22.17 டி.எம்.சி.,யாக அதிகரித்தது.

Advertisement