சீன உளவாளியுடன் ரகசிய தொடர்பு; என்விடியா சி.இ.ஓ., பதவி பறிப்பு?
வாஷிங்டன்: சீனப் பெண் உளவாளியுடன் ரகசியத் தொடர்பு வைத்திருந்த சர்ச்சையில் சிக்கியுள்ள, உலகின் முன்னணி ஏ.ஐ., சிப் தயாரிப்பு நிறுவனமான 'என்விடியா'வின் சி.இ.ஓ., ஜென்சன் ஹுவாங்கை, பதவியில் இருந்து நீக்க, அந்நிறுவன நிர்வாகக் குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான என்விடியாவின் இணை நிறுவனரும், சி.இ.ஓ.,வுமான ஜென்சன் ஹுவாங் (63), ஆலிஸ் ஹுவாங் என்ற சீன உளவாளி பெண்ணுடன் திருமணத்தை மீறிய ரகசியத் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆலிஸ் ஹுவாங் சீன உளவுத்துறையின் ஏஜென்ட் என அமெரிக்க உளவுத்துறை சந்தேகிப்பதால், இந்த விவகாரம் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.
மன்னிப்பு கேட்ட சி.இ.ஓ.,:
இந்தப் புகார் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, தனது மனைவிக்குத் துரோகம் செய்துவிட்டதை ஒப்புக்கொண்ட ஜென்சன் ஹுவாங், தன் குடும்பத்தினர் மற்றும் நிறுவன ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார்.
இதற்கிடையில், என்விடியா நிறுவனத்தின் துணைத் தலைவர் கிம்பர்லி பவல் என்பவருடனும் ஹுவாங்கிற்கு தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிறுவனம் அதிரடி:
இந்தச் சர்ச்சைகள் குறித்து விரிவான விசாரணைக்கு என்விடியா நிர்வாகக் குழு உத்தரவிட்டுள்ளது. நிறுவனத்தின் நற்பெயர் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஜென்சன் ஹுவாங்கை சி.இ.ஓ., பதவியில் இருந்து நீக்குவது குறித்து நிர்வாகக் குழு தீவிரமாக ஆலோசித்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்தச் செய்தியால் பங்குச்சந்தையில் என்விடியா நிறுவனத்தின் பங்குகள் கடுமையாகச் சரிந்துள்ளன.
மேலும்
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
கலெக்டருக்கு டார்ச்சர்; கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்