12 ஆண்டு தலைமறைவாக இருந்த தேடப்படும் குற்றவாளி கைது
கரூர்:கரூர்
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டை மூலம், 12 ஆண்டுகளாக
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளி,
திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டத்தில், எஸ்.பி.,
ரகுபதி தலைமையில் கடந்த, 7ம் தேதி முதல் தீவிர தேடுதல் வேட்டை
நடத்தப்பட்டது. வாகன தணிக்கை, பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட
தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்தல், பொது இடங்களில் மது
அருந்துபவர்கள் மீது நடவடிக்கை, தனியாக வசிக்கும் முதியவர்களை
கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டன. கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், 201-4ம் ஆண்டு
கொலை வழக்கில் தொடர்புடைய, கரூர் வெங்கமேடு ரெட்டிக்கடை தெருவை
சேர்ந்த ஜெரால்டு (எ) அடைக்கலம், 56, என்பவர், ஜாமினில் வெளிவந்த நாளில்
இருந்து, 12 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து
தலைமறைவாக இருந்து வந்ததால், இவரை, பிரகடனப்படுத்தப்பட்ட
குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது.
இவரை பிடிக்க கரூர் டவுன்
எஸ்.ஐ., ரமேஷ், தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து
மொபைல் சிக்னல் மற்றும் இருப்பிடத்தை ஆய்வு செய்து, திருப்பூரில்
பதுங்கியிருந்த ஜெரால்டை நேற்று போலீசார் கைது செய்தனர்.
மாவட்டத்தில் குற்றங்களை ஒடுக்கவும், தலைமறைவு குற்றவாளிகளைக்
கைது செய்யவும், இதுபோன்ற அதிரடி நடவடிக்கை தொடரும் என,எஸ்.பி., ரகுபதி தெரிவித்துள்ளார்.
மேலும்
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்
-
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்க பாஜ வலியுறுத்தல்
-
ஹிமாசல்லில் பாரா கிளைடிங் விபத்தில் சுற்றுலாப் பயணி பலி