திருமுக்கூடலுார் கோவில் சர்ச்சை இந்து அமைப்பு, பா.ஜ., போர்க்கொடி
கரூர்:கரூர்
அருகே புகழ்பெற்ற திருமுக்கூடலுார் அகத்தீஸ்வரர் கோவில்
அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர்
ராஜேஷ்குமார், கரூர் காங்.,- எம்.பி., ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம்
த.வெ.க.,- எம்.எல்.ஏ. சத்யா உள்பட பலர் ஆய்வுக்காக நேற்று முன்தினம்
சென்றிருந்தனர். அப்போது, அவர்கள் செருப்பு அணிந்தவாறே கோவில்
வளாகத்தில் ஆய்வில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக பா.ஜ., ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் குப்புராவ் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவில்
வளாகம் என்பது புனிதமான இடமாகும். தவறுதலாக நடந்திருந்தால் கூட
பரவாயில்லை; அங்கிருந்த பக்தர்கள் சுட்டிக்காட்டியும்,
அலட்சியமாக பதிலளித்து விட்டு சென்ற செயல் அதிர்ச்சியளிக்கிறது.
இது கடவுளை மட்டும் அவமதிக்கும் செயல் அல்ல; ஒட்டுமொத்த
பக்தர்களையும், கடவுள் நம்பிக்கை கொண்ட இந்து மக்களையும்
அவமதிப்பதாகும். இதுபோன்ற செயல்கள் மற்றவர்களுக்கு தவறான
முன்னுதாரணமாக
அமைந்துவிடும்.
மக்கள் இதை ஒரு வேளை கடந்து
செல்லலாம், ஆனால் இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். கடவுள் மறுப்பு
கொள்கையை தவிர்த்து, ஈ.வெ.ரா.,வை ஏற்பதாக கூறும், த.வெ.க., தற்போது
அந்த கடவுள் மறுப்பு கொள்கையையும் மறைமுகமாக பின்பற்றத்
தொடங்கி விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, கோவில் புனிதத்தை
அவமதிக்கும்
வகையில் நடந்து கொண்ட அமைச்சர் ராஜேஷ்குமார் உள்பட அனைவரும் பகிரங்க
மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், இந்து மக்கள் கட்சி மாவட்ட அமைப்பு செயலாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருமுக்கூடலுார்
அகத்தீஸ்வரர் கோவிலில் அமைச்சர் ராஜேஷ்குமார், காங்.,- எம்.பி.
ஜோதிமணி, த.வெ.க.,- எம்.எல்.ஏ., சத்யா உள்ளிட்டோர் செருப்புடன் நுழைந்து
இந்து மக்களின் நம்பிக்கை, பாரம்பரிய ஆலய வழிபாட்டு முறைகளை
அவமதித்துள்ளனர். கோவில் வளாகத்தில் செருப்புடன் நுழைவது ஆகம
விதிகளுக்கும், பக்தர்களின் மத உணர்வுகளுக்கும்
எதிரானது.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்க பாஜ வலியுறுத்தல்
-
ஹிமாசல்லில் பாரா கிளைடிங் விபத்தில் சுற்றுலாப் பயணி பலி
-
தூய்மையான நகரங்கள் பட்டியல்; விருதை வென்ற தமிழக நகரம் எது தெரியுமா?
-
சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த இந்திய மாலுமிகள் 4 பேர்; தக்க நேரத்தில் உதவிகரம் நீட்டிய தூதரகம்
-
விலைவாசி உயர்வைக் கண்டித்து ஸ்பெயினில் பொதுவேலைநிறுத்தம்; போராட்டத்தில் வெடித்தது வன்முறை
-
இக்கட்டான தருணங்களில் மக்கள் ஒன்றிணைவார்கள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்