சிலிண்டரில் தீ; பாதுகாப்பாக மீட்ட வீரர்கள்

குளித்தலை,:கடம்பர்கோவில் கடைவீதியில் வைத்தியநாதன், 55, என்பவர் ஓட்டு கொட்டகை கடையில் காரம், இனிப்பு, சிப்ஸ் உள்ளிட்ட பலகாரங்களை தயாரித்து விற்பனை செய்கிறார். நேற்று மதியம் 12:40 மணியளவில் கடையில் பலகாரம் தயாரிக்கும்போது, சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் டியூப் மற்றும் சிலிண்டரில் தீப்பற்றியது.

அருகில் இருந்தவர்கள், சிலிண்டரில் இருந்து எரியும் தீயை அணைக்க முயற்சி செய்தனர். முடியாததால் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே, கடைக்கு வரும் மின்சாரத்தை துண்டிப்பு செய்தனர். பின்னர், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவா தலைமையில், வீரர்கள் தீப்பற்றி எரிந்த சிலிண்டரை பாதுகாப்புடன் மீட்டனர். தீ விபத்தால் மேற்கூரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காகித பெட்டிகள் எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement