முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்பட்ட மின்சாரம் வேலாயுதம்பாளையத்தில் வணிகம் பாதிப்பு
கரூர்:வேலாயுதம்பாளையம்
சுற்றுவட்டாரத்தில் முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்பட்ட
மின்சாரத்தால், வணிக நிறுவனங்களில் பாதிப்பு ஏற்பட்டது.
புகழூர்
துணை மின் நிலையத்திலிருந்து தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர்,
பாலத்துறை, வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி
உள்பட பல்வேறு பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு
வருகிறது. இந்நிலையில் நேற்று அடிக்கடி வேலாயுதம்பாளையம்,
வள்ளுவர் நகர், மலை நகர், முல்லை நகர், கந்தம்பாளையம்,
தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் எவ்வித
முன்னறிவிப்புமின்றி மின் வினியோகம் தடைபட்டது. திடீரென ஏற்பட்ட
மின்தடை காரணமாக கடைகள், பால் பூத்கள், குளிர்பான கடைகள் உள்பட வணிக
நிறுவனங்கள் மின்சாரம் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டன.
கடைகளில்
குளிர்பதன பெட்டி இயங்காததால் வியாபாரம் செய்ய முடியாமல்
கடைக்காரர்கள் தவித்தனர். மேலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள்
அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
எனவே, இதுபோன்ற திடீர் மின்தடைகளை தவிர்த்து, சீரான முறையில்
தடையின்றி மின்சாரம் வினியோகிக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
மேலும்
-
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்க பாஜ வலியுறுத்தல்
-
ஹிமாசல்லில் பாரா கிளைடிங் விபத்தில் சுற்றுலாப் பயணி பலி
-
தூய்மையான நகரங்கள் பட்டியல்; விருதை வென்ற தமிழக நகரம் எது தெரியுமா?
-
சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த இந்திய மாலுமிகள் 4 பேர்; தக்க நேரத்தில் உதவிகரம் நீட்டிய தூதரகம்
-
விலைவாசி உயர்வைக் கண்டித்து ஸ்பெயினில் பொதுவேலைநிறுத்தம்; போராட்டத்தில் வெடித்தது வன்முறை
-
இக்கட்டான தருணங்களில் மக்கள் ஒன்றிணைவார்கள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்