'குடி'மகன் தாக்கியதில் பஸ் டிரைவர் மூக்குடைப்பு

இடைப்பாடி: சேலத்தில் இருந்து அரசு பஸ் நேற்று இடைப்பாடிக்கு சென்று கொண்டிருந்தது

இடைப்பாடி, சித்துாரை சேர்ந்த குமரன், 50, ஓட்டினார். ஆலச்சம்பாளையத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 25, கண்டக்டர் பணியில் ஈடுபட்டார். மதியம், 1:00 மணிக்கு கொங்கணாபுரம், எருமைப்பட்டி ஸ்டாப்பில், வெள்ளாண்டிவலசை சேர்ந்த சடையன், 47, என்பவர், 'போதை'யில் ஏறினார்.கொங்கணாபுரத்துக்கு டிக்கெட் எடுத்துவிட்டு அங்கு இறங்காமல் வந்தார். கண்டக்டர், டிக்கெட் எடுக்க அறிவுறுத்தியும், அவர் எடுக்கவில்லை. ரெட்டிப்பட்டியில் பஸ்சை நிறுத்திய டிரைவர் குமரன், சடையனிடம் கேட்டார். அவர், குமரன் மூக்கின் மீது குத்தியுள்ளார். ரத்தம் வர, இடைப்பாடி அரசு மருத்துவமனையில் குமரன் சேர்க்கப்பட்டார். அவர் புகார்படி, கொங்கணாபுரம் போலீசார்,
சடையனிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement