ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம்

கரூர்:வரும் டிச., 11-ம் தேதி மாவட்ட ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரும் டிச., 11-ம் தேதி காலை, 10:30 மணியளவில் ஓய்வூதியதாரர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டம் கோவை கருவூலம் மற்றும் கணக்குத் துறை மண்டல இணை இயக்குனர் முன்னிலையில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை இரட்டை பிரதிகளில் சமர்ப்பிக்கலாம்.

மனுக்களை அனுப்ப விரும்பும் ஓய்வூதியதாரர்கள், தங்களது தபால் உறையின் மீது 'ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் மனு' என்று தெளிவாக குறிப்பிட்டு, தபால் மூலமாகவோ அல்லது கரூர் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளரிடம் (கணக்குகள்) நேரிலோ வரும் டிச.,9-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

முன்கூட்டியே மனு அளிக்க இயலாதவர்கள், டிச., 11ம் தேதி நடக்கவுள்ள குறைதீர் கூட்டத்தில் நேரடியாக மனுக்களை அளிக்கலாம்.
இதகதகவலை, கரூர் கலெக்டர் பிரசன்னா ராமசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement