பத்திர எழுத்தர்கள் பணி புறக்கணிப்பு

ஈரோடு:பத்திர பதிவுத்துறையை நவீனப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில், 3.0 என்ற திட்டம் கடந்த ஆகஸ்டில் அமலானது. பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரில் வராமல் ஆன்லைன் மூலம் பத்திரத்தை பதிவு செய்ய முடியும்.

அதிநவீன வசதியுடன் அனைத்து வகை பத்திரப்பதிவு சேவைகளை, ஒரே இடத்தில் பெறும் வகையில் சேவை மையங்கள் அமைக்கப்படுகிறது. காகிதமில்லா பதிவு செய்யப்படும் என அறிவித்து செயல்படுத்துகிறது.
இதற்கு பத்திரப்பதிவு எழுத்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், இதனை அமலாக்கக்கூடாது எனக்கூறி கடந்த இரு தினங்களாக, பத்திரப்பதிவு தொடர்பான பணிகளை செய்யாமல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், ஈரோடு ரங்கம்பாளையம் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும், பொதுமக்களே செயல்படுத்தும் பணிகள், நகல் எடுக்க விண்ணப்பித்தல் போன்ற பணிகள் மட்டும் நடந்தது.

Advertisement