சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சத்தியமங்கலம் அடுத்த புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான், 20. இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகி காதலித்துள்ளனர்.
திருமணம் செய்வதாக கூறி பலமுறை தனிமையில் இருந்துள்ளனர். இதில் சிறுமி பாதிக்கப்பட்டதால், அவரது பெற்றோர் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். ஷாஜகானை போலீசார் போக்சோவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement