1,000 ஆண் குழந்தைகளுக்கு 1,010 பெண் குழந்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலின விகிதம் உயர்வு
கிருஷ்ணகிரி: ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,000 ஆண் குழந்தைகளுக்கு 1,010 பெண் குழந்தை என்ற அளவில் பாலின விகிதம் உயர்ந்துள்ளது,'' என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற தலைப்பில், பெண் குழந்தை களுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 850 முதல், 870 பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்து வந்த நிலை இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்த, பெண் சிசுக்கொலை மற்றும் பாலினத்தேர்வு கருக்கலைப்புக்கு எதிராக, மாவட்ட நிர்வாகம் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. இதில் ஈடுபட்ட நபர்கள் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் தற்போது, 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 1,005 முதல், 1,010 பெண் குழந்தைகள் என்ற அளவில் பாலின விகிதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டம் மாநிலத்திலேயே அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டங்களில் ஒன்றாக சாதனை படைத்துள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
உதவி ஆணையர் (ஆயம்) பழனி, மாவட்ட சுகாதார அலுவலர் ஜெகநாதன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவியர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
கலெக்டருக்கு டார்ச்சர்; கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்