சென்டர் மீடியன் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

பாகூர்: புதுச்சேரி – கடலுார் சாலை கன்னியக்கோவிலில் சென்டர் மீடியன் அமைக்கும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை, தேசிய நெடுஞ்சாலைத் பிரிவு மூலமாக, புதுச்சேரி – கடலுார் சாலையில் கன்னியக்கோவிலில் முதல் மனப்பட்டு சந்திப்பு வரை சென்டர் மீடியன் அமைக்கவும் மற்றும் காட்டுக்குப்பம் முதல் முருங்கப்பாக்கம் வரை ஏற்கனவே அமைக்கப்பட்ட சென்டர் மீடியனுக்கு வண்ணம் பூசுதல் பணிக்காக 37 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப் பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் சீனிவாசராம், உதவி பொறியாளர் சிவப்பிரகாசம் இளநிலை பொறியாளர்கள் கிருஷ்ணகுமார், மணிவண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement