இடத்தில் ரகளை 5 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

டி நகர் போலீசார் கோரிமேடு டிரெக் டெர்மினல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட திருநெல்வேலி அசன் மொய்தீன்,43; கோரிமேடு செல்வின்பால்,38; ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர்.

அதேபோல், இந்திரா நகர் ஆம்புலன்ஸ் ஸ்டாண்ட் அருகில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட கோரிமேடு செல்வபிரியன்,38; திலாஸ்பேட்டை யோகேஷ்வரா, 30; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

முத்தியால்பேட்டை போலீசார் குருசுக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவுக்கா சின்னதம்பி வீதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட முத்தியால்பேட்டை வசந்தகுமார் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement