நவீன ராணுவத்திலும் போர்வீரனே முதன்மை: ஜெனரல் தீரஜ் சேத் வலியுறுத்தல்
புதுடில்லி:டில்லியில் 'மெகனைஸ்டு போர்சஸ் சிம்போசியம் 2026' என்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏஐ ட்ரோன் போர்முறை மனிதவளம்-ட்ரோன்கள் இணைந்த கூட்டுச் செயல்பாடுகள், நெட்வொர்க், நவீனப் போர் முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் ராணுவ ஜெனரல் சேத் கலந்து கொண்டு பேசுகையில்,
ராணுவத்தில் தற்போது நடைபெற்று வரும் மாற்றமானது நவீன உபகரணங்களை வாங்குவது, கட்டமைப்பை மேம்படுத்துவதுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது.
உண்மையான நவீனமயமாக்கல் என்பது புதுமைப் படைப்பு,தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளுதல்,சுறுசுறுப்பான சிந்தனை, முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு, உள்நாட்டுத் தற்சார்பு, அக்னிவீரர்கள் முதல் முன்னாள் ராணுவத்தினர் வரையிலான மனித வளம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதில் போர்வீரனே எப்போதும் முதன்மையாகவும் மையப்புள்ளியாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும்
-
ஹிமாசல்லில் பாரா கிளைடிங் விபத்தில் சுற்றுலாப் பயணி பலி
-
தூய்மையான நகரங்கள் பட்டியல்; விருதை வென்ற தமிழக நகரம் எது தெரியுமா?
-
சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த இந்திய மாலுமிகள் 4 பேர்; தக்க நேரத்தில் உதவிகரம் நீட்டிய தூதரகம்
-
விலைவாசி உயர்வைக் கண்டித்து ஸ்பெயினில் பொதுவேலைநிறுத்தம்; போராட்டத்தில் வெடித்தது வன்முறை
-
இக்கட்டான தருணங்களில் மக்கள் ஒன்றிணைவார்கள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்
-
விவசாயிகளே எங்களின் முதல் முன்னுரிமை: பிரதமர் மோடி பெருமிதம்