விவசாயிகளே எங்களின் முதல் முன்னுரிமை: பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி: 'சர்வதேச அளவில் நெருக்கடியான சூழல் நிலவினாலும், நாட்டின் விவசாயிகளே அரசின் முதல் முன்னுரிமை' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2026 - 27ம் ஆண்டிற்கான குளிர்கால பருவ சாகுபடிக்குத் தேவையான பாஸ்பரஸ், பொட்டாஷ் உரங்களுக்கான மானியத்துக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
ரூ.62,370 கோடி ஒதுக்கீடு
இந்த குளிர்கால பருவ உர மானியத்திற்காக, சுமார் 62,370 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2025 - 26ம் ஆண்டின் ரபி பருவ மானியத் தொகையை விட, சுமார் 24,418 கோடி ரூபாய் அதிகம்.
மத்திய அமைச்சரவையின் இந்த முடிவை வரவேற்று, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
நம் நாட்டின் விவசாயிகள், எப்போதும் எங்கள் அரசின் முன்னுரிமையாக இருந்து வருகின்றனர். உலகளவில் சவாலான சூழ்நிலைகள் நிலவி வரும் போதிலும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு எந்தக் குறையும் வைக்கவில்லை.
இதன் ஒரு பகுதியாக, 2026 - 27 குளிர்கால பருவத்திற்கான உர மானியத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வாயிலாக, சர்வதேச சந்தையில் ஏற்படும் உர விலை உயர்வு, நமது விவசாயிகளை எந்த வகையிலும் பாதிக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்குத் தடையின்றி நியாயமான, கட்டுப்படியான விலையில் உரங்கள் தொடர்ந்து கிடைக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
விவசாயிகள்
சரியாகத்தான் சொன்னீர்கள் மோ அவர்களே.
விவசாயிகள் தான் நாட்டின் உயிர்மூச்சு, முதுகெலும்பு. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்.
ஆனால் சிக்கிம் முதல்வராக இருந்த PAWAN KUMAR CHAMLING - சிக்கிம் மாநிலத்தை ரசாயனம் இல்லாத ம NATURAL FARMING மாநிலமாக மாற்றினார்.
அவரை புகழ்ந்த நீங்கள் - நாடு முழுதும் - ரசாயனங்களை அகற்றி NATURAL FARMING ஐ அமல்படுத்தவில்லைமேலும்
-
ஹிமாசல்லில் பாரா கிளைடிங் விபத்தில் சுற்றுலாப் பயணி பலி
-
தூய்மையான நகரங்கள் பட்டியல்; விருதை வென்ற தமிழக நகரம் எது தெரியுமா?
-
சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த இந்திய மாலுமிகள் 4 பேர்; தக்க நேரத்தில் உதவிகரம் நீட்டிய தூதரகம்
-
விலைவாசி உயர்வைக் கண்டித்து ஸ்பெயினில் பொதுவேலைநிறுத்தம்; போராட்டத்தில் வெடித்தது வன்முறை
-
இக்கட்டான தருணங்களில் மக்கள் ஒன்றிணைவார்கள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்
-
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகள் விதித்தது ஈரான்