கார் ஷோரூமில் தீ விபத்து ரூ.2 கோடி பொருட்கள் நாசம்
சேலம்: கார் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில், 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமடைந்தன.
சேலம், அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன், 58. திவ்யம் தியேட்டர் பகுதியில், ‘லட்சுமி ஆட்டோமொபைல்ஸ் வேல்டு’ பெயரில், கார், உதிரிபாகங்கள் விற்பனை கடை வைத்துள்ளார்.
நவ., 6 இரவு, மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் வந்து, தீயை அணைத்தனர். சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின.
இந்நிலையில், இயந்திரங்கள் உட்பட, 2.5 கோடி ரூபாய் மதிப்பில் பொருட்கள் சேதமடைந்தன.
இது குறித்து, ஷோரூம் நிர்வாக இயக்குனர் விஸ்வநாதன், நேற்று முன்தினம் கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்க பாஜ வலியுறுத்தல்
-
ஹிமாசல்லில் பாரா கிளைடிங் விபத்தில் சுற்றுலாப் பயணி பலி
-
தூய்மையான நகரங்கள் பட்டியல்; விருதை வென்ற தமிழக நகரம் எது தெரியுமா?
-
சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த இந்திய மாலுமிகள் 4 பேர்; தக்க நேரத்தில் உதவிகரம் நீட்டிய தூதரகம்
-
விலைவாசி உயர்வைக் கண்டித்து ஸ்பெயினில் பொதுவேலைநிறுத்தம்; போராட்டத்தில் வெடித்தது வன்முறை
-
இக்கட்டான தருணங்களில் மக்கள் ஒன்றிணைவார்கள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்
Advertisement
Advertisement