சமுதாய உறிஞ்சு குழிகள் மாயம் பராமரிப்பில் அலட்சியம்
உடுமலை:நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த கிராமங்களில் அமைக்கப்பட்ட சமுதாய உறிஞ்சு குழிகள் பராமரிப்பில் ஊராட்சி நிர்வாகத்தினர் அலட்சியம் காட்டுவதால், அரசு நிதி வீணடிக்கப்பட்டு, மழை நீர் சேகரிப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
துாய்மை பாரத திட்டம் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு
திட்டத்தின் கீழ், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய ஊராட்சிகளில், உறிஞ்சு குழிகள் அமைக்கும் திட்டம், சில ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில், வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் சேகரிக்க, உறிஞ்சு குழி அமைக்கவும், அங்கிருந்து நீர்நிலைகளில் கழிவு நீர் கலக்கும் முன், துாய்மைப்படுத்த கிடைமட்ட சமுதாய உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டது.
ஒவ்வொரு சமுதாய உறிஞ்சு குழிக்கும், ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில், தொட்டி கட்டி, தண்ணீரை வடிகட்ட மூன்று சல்லடைகள் பொருத்தப்பட்டன. சுற்றிலும் ஜல்லிக்கற்களும் பரப்பினர்.
ஆனால், உறிஞ்சு குழிகள் பராமரிப்பை ஊராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை. இதனால், குடியிருப்புகளில் இருந்து கழிவு நீர், சமுதாய உறிஞ்சு குழிகளுக்கு வரவில்லை.
மழை நீரும், உறிஞ்சு குழிகளுக்கு செல்வதற்கான பாதைகள் பராமரிக்கப்படாமல் புதர் மண்டி காணப்படுகிறது. இவ்வாறு, ஒவ்வொரு ஊராட்சியிலும், பல லட்சம் ரூபாய் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது; மழை நீர் சேகரிப்பும், சுகாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
சமுதாய உறிஞ்சு குழிகள் பராமரிப்பு குறித்து ஊரக வளர்ச்சி துறை உயர் அதிகாரிகள், அனைத்து ஊராட்சிகளிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்
-
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்க பாஜ வலியுறுத்தல்
-
ஹிமாசல்லில் பாரா கிளைடிங் விபத்தில் சுற்றுலாப் பயணி பலி
-
தூய்மையான நகரங்கள் பட்டியல்; விருதை வென்ற தமிழக நகரம் எது தெரியுமா?
-
சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த இந்திய மாலுமிகள் 4 பேர்; தக்க நேரத்தில் உதவிகரம் நீட்டிய தூதரகம்