ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் திருப்பம்: தலைமறைவு குற்றவாளி கோர்ட்டில் சரண்
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில், தலைமறைவாக இருந்த, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமாரின் கார் ஓட்டுநர் சரவணன், 45, நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்த அனுமதி வழங்குவதாகக் கூறி, கடந்த தி.மு.க., ஆட்சியில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்று மோசடி செய்ததாக, தனியார் பள்ளிகள் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில், ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட, தி.மு.க.,வைச் சேர்ந்த, பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், கடந்த 26ல் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமாரின் கார் டிரைவர் சரவணன், சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவரை, வரும் 25ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, இவ்வழக்கில் மகேஷ் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்த போது, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமாரின் தலைமறைவை காரணம் காட்டி, உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்க மறுத்தது.
இதையடுத்து, மகேஷ் கைதான இரண்டு நாட்களில், முத்துகுமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தற்போது சரவணன் தலைமறைவை காரணம் காட்டி, மீண்டும் மகேஷின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், சரவணன் நீதிமன்றத்தில் சரணடைந்தது, வழக்கு விசாரணையில் புது திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. முத்துகுமார், சரவணன் ஆகியோரை, காவலில் எடுத்து விசாரிக்கும் போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என, போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், முத்துகுமாரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, போலீசார் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, நீதிபதி சத்தியமூர்த்தி தள்ளி வைத்துள்ளார்.
@block_B@
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தர லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் இருப்பதாகக் கூறி, சிறப்பு நீதிமன்றம், அவரது ஜாமின் மனுவை நேற்று முன் தினம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன், நேற்று காலை ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ''மகேசுக்கு ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும்,'' என முறையீடு செய்தார்.
அப்போது, இந்த மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகளை இன்றைக்குள் முடித்துவிட்டால், வழக்கை நாளை விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இதற்கிடையே, ''தனியார் பள்ளிகளிடம் நிதி வசூலித்த விவகாரத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி மகேஷ் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்,'' என, மூத்த வழக்கறிஞர் வில்சன் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்று அந்த வழக்கு விசாரணையை நவ., 30ம் தேதிக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.block_B
அது எப்படி இதுவரையில் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தவர் நடிப்பு அரக்கனின் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதும் வந்து சரணடைகிறார்? அப்படியென்றால் இவர்களை இயக்குபவர் யார் என்று எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிகிறதே. கோடி கோடியாய் வெளிப்படையாக கொள்ளையடித்திருக்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்களுக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றன இன்றைய உளுத்துப்போன சட்டங்கள். திமுகவை ஒழிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது.
பல வருடங்கள் வழக்கு நடக்கும் ஆனால் ஒருவருக்கும் சிறை கிடைக்காது இதுதான் நம்ம சட்டம் .வழக்கு முடியுமுன் அடித்த கொள்ளை பணம் செலவாகி விடும் எனவே அடுத்த ஊழலுக்கு ஏற்பாடு செய்யலாம்மேலும்
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
கலெக்டருக்கு டார்ச்சர்; கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு