குழாய் பழுதால் இன்று குடிநீர் 'சப்ளை' நிறுத்தம்

குமாரபாளையம்:'குமாரபாளையம் அருகே குழாய் பழுதால், இன்று குடிநீர் வினியோகம் இருக்காது' என, நகராட்சி கமிஷனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை: குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஓலப்பாளையம் சாலையில், 300 எம்.எம்., குடிநீர் உந்து குழாய் சேதமானதால், 7, 9, 10, 11, 12, 13, 14 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில், இன்று ஒருநாள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது. அதனால், பொதுமக்கள், இருக்கும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement